உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவித்த ஜனாதிபதியொருவரும் இருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவித்துள்ளதாவது
வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார்.இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார்
இது எனக்கு நடந்துள்ளது.நான் பிரதமராக இருந்த வேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள்.அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்
எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்
உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன்.
அந்த நபருடன் சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வந்திருந்தார்.
இளவயதிலிருந்து விழுமியங்களை கற்றுக்கொடுப்பதற்கு முயலவேண்டும்,ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம்.
உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவிக்கும் ஜனாதிபதியொருவரும் இருந்தார். அவர் இதனை தனது அமைச்சரவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், தனது கட்சிக்காரர்களிற்கும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் திருடினார்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.இந்த அமைப்புமுறையே நாட்டை சீரழித்தது.
அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தகர்கள் இலஞ்சம் வழங்க முன்வருவார்கள்,பரந்துபட்ட ஊழல் நாட்டை இறுதியில் வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என தெரிவித்தார்.