சான்றுப்பொருட்கள் அறிக்கையை எதிர்பார்க்கும் நீதிமன்று!

by 9vbzz1

மன்னார் புதைகுழியில் மனித எலும்புக்கூடுகளிற்கு மேலதிகமாக கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் ராஜலசோமதேவவிட அவற்றின் காலப்பகுதி என்னவாக இருக்கும் என்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. அத்தோடு மேலதிகமாக சதொச மனித புதை குழியை மீண்டும் அகழ்வு செய்ய வேண்டுமா? அல்லது அதனை பாதுகாக்க வேண்டுமா? என்பது தொடர்பான அபிப்பிராயங்களை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களாலும் சட்ட வைத்தியர் ராஜபக்ச அவர்களினாலும் அறிக்கை ஒன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் நீதிமன்றினால் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கும்இ சதொச மனித புதைகுழியில் ஆறு வருடங்களுக்கு முன்னர் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகளை தடயவியல் மானுடவியல் பரிசோதனைக்கு பொருத்தமான மற்றொரு இடத்தில் சேமித்து வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிமன்றம் நேற்று (ஒக்டோபர் 16) அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 2013ஆம் ஆண்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட 82 சடலங்களின் கார்பன் ஆய்வுக்கு தேவையான மாதிரிகளை புளோரிடாஇ மியாமியில் அமைந்துள்ள பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் சதொ மற்றும் திருக்கேதீச்சரம் பகுதியில் இரு பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்