இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஊழல் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய தலைவர்களை உருவாக்குங்கள்
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நேர்மை காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாட்டில் அனைவருக்கும் கதவுகள் திறக்கப்பட வேண்டும், படித்த, முக்கியமானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
அதேசமயம் நான் எனது நேரத்தை அரசியலுக்காக ஒதுக்கவில்லை. புதிய தலைவர்களை உருவாக்குங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.