ஜேவிபியும் பார் பெமிட் பெற்றதா?

by wamdiness

தமிழ் அரசியல்வாதிகள் மதுபானசாலை அனுமதி விடயத்திலே அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயம் என ஈழம் சிவசேனை ஆதரவு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடக்கின்ற எல்லா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தமிழ் அரசியல்வாதிகளைக் காண முடியும். ஆனால் அவர்கள் தான் அதற்குரிய காரணமென்பது மிகவும் வேடிக்கையானது என யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வை நோக்கிய நகர்விற்காக மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். அந்த ஆணை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு மக்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை.

நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிலையிலிருந்து மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கின்றோம். மதுபான பாவனையில் முதலிடத்தில் நுவரெலியாவும் இரண்டாம் இடத்தில் யாழ்ப்பாணமும் என்றவாறு தமிழ் பகுதிகள் முதல் இடங்களில் இருப்பது திட்டமிட்ட செயற்பாடு எனவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்