ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகையில் அது பொய்யாதென மறுதலித்துள்ளார்.
தகவல் குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில் இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தின் வருட் நகரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அக் காணொளி மயூர் போர்டே என்பவர் மஹாராஸ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதை கண்டறிய முடிந்தது..
ஆகவே, ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் இருப்பது அங்கஜன் இராமநாதன் அல்ல என்பதையும், அது உண்மையில் மயூர் போர்டே என்பவர் மஹாராஸ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதையும் அவரது கட்சி உறுதிப்படுத்துகின்றது.