10
மர்மப்பொருள் சிட்னி கடற்கரைகள மூடப்பட்டது!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இரண்டு பிரபலமான கடற்கரைகள் நூற்றுக்கணக்கான மர்மமான கருப்பு பந்துகள் தோன்றியதை அடுத்து, மறு
அறிவிப்பு வரும் வரை கடற்கரை பொதுமக்களுக்கு மூடப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாயன்று கூகி கடற்கரையின் நீளத்தில் கறுப்பு கோள வடிவ குப்பைகளைக் கண்டுபிடித்த பின்னர் கூகி கடற்கரை மக்கள் பாவனை செய்ய முடியாது என மூடப்பட்டது.
இன்று புதன்கிழமை கூகிக்கு வடக்கே உள்ள கோர்டன்ஸ் பே கடற்கரையிலும் இந்த மர்மமான கோள வடிவ குப்பைகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து கோர்டன்ஸ் பே கடற்கரையும் மூடப்பட்டது.