இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு பிரஜைகள் மேலும் சிலர் கைது !

by sakana1

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு பிரஜைகள் மேலும் சிலர் கைது ! on Wednesday, October 16, 2024

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணவில வீதியிலுள்ள புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (15) கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், கென்யா பெண்ணொருவர் மற்றும் ஒரு சீன ஆண் ஒருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 கணனிகள், 3 இணைய ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்