2
டெங்கு நோய் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை ! on Tuesday, October 15, 2024
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,657 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வருடத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை , கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.