இந்தியா அரசாங்கத்திற்கும் கனடிய அரசாங்கத்திற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இந்திய அரசாங்கம் கனடாவுக்கான தனது நாட்டு ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
கன்னடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான கனடிய ராஜதந்திரியை அழைத்து இது தொடர்பிலான எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்தியாவே இந்திய தூதுவர் அல்லது ராஜதந்திரிகளை அடிப்படை அற்ற விதத்தில் இலக்கு வைப்பதும் குற்றம் சுமத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.
சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பில் இந்திய உயர்த்தானிகள் மற்றும் ஏனைய ராஜதந்திரிகள் மீது கனடா நேரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது.
கனடிய பிரதமர் ட்ரூடோ, தேர்தலை இலக்கு வைத்து அரசியல் நடத்துவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.