அரியத்தின் கணக்கு யாரிடம்!

by adminDev2

சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பொதுவேட்பாளரது ஜனாதிபதி தேர்தல் செலவீன கணக்கறிக்கை உரியமுறைப்படி தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு விட்டது,அது விரைவில் பொதுமக்கள் பார்வைக்கும் தரப்படும் என தமிழ் பொதுகட்ட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்று மாலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அரியநேந்திரனின் தேர்தல் செலவீன அறிக்கை வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் முன்னணி நிறுவனம் ஒன்று பெருமளவு நிதியை தேர்தலில் செலவிட்டதான குற்றச்சாட்டை இதுவரை பொதுக்கட்டமைப்பு மறுக்காதேயிருந்துவருகின்றது.

முன்னதாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளதாக அறிவித்திருந்தது.

அவருடன் பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்ன ஆகியோரும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையெனவும் மூவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்