6
போலி இலக்கத் தகட்டை பயன்படுத்திய பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கைது ! on Tuesday, October 15, 2024
போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப் வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த, புவக்தாண்டவ வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் நேற்று கைப்பற்றப்பட்டதையடுத்து தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று முன்னாள் உப தலைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வாகனம் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரால் பயன்படுத்தப்பட்டதாக அசல் இலக்கத் தகடு கொண்ட வாகனம் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனவும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.