6
யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் திருட்டு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் நேற்றைய தினம் உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்