Tag யாழ்ப்பாணம்

கல்லுண்டாயில் குப்பைகளை கொட்டாதே

யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்தும்படி கோரியே  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் கல்லுண்டாய் பகுதியில் மக்களால் வழிமறிக்கப்பட்டு தடுத்து…

கல்லுண்டாய் தீ – மக்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பைமேட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது.  தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கல்லுண்டாய்வெளியில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்துவரும் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகள் சகிதம் இரவிரவாக வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், தமது…

கல்லூண்டாய் குப்பை மேட்டில் தீ

யாழ். மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்பட்டு வருவதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். அத்தோடு, குப்பைகளை சரியான முறையில் சேகரித்து, வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.…

காரைநகர் கடலில் கஞ்சாவுடன் மூவர் கைது

காரைநகர் கடலில் கஞ்சாவுடன் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தை படகை வழிமறித்து சோதனையிட்டனர். அதன்போது படகில் 250 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டதை அடுத்து, அதனை மீட்ட…

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்

வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று…

செம்மணியில் இன்று சனிக்கிழமையும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  இன்றைய  அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்…

உணவைத் தேடுவது ஒருபோதும் மரண தண்டனையாக இருக்கக்கூடாது – ஐ.நா பொதுச் செயலாளர்

காசாவில் ஐ.நா தலைமையிலான மனிதாபிமான முயற்சிகள் நெரிசல் அடைகின்றன என்றும், உதவிப் பணியாளர்களே பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.  பாலஸ்தீன எல்லைக்குள் மற்றும் அதன் வழியாக உதவிகளை வழங்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார். தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் உணவளிக்க முயற்சிக்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். உணவு தேடுவது ஒருபோதும் மரண…

பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல்

பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல் யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் முட்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்வதற்கும் எந்த நேரத்தில்…

பலாலி அம்மனை வழிபட மீண்டும் தடை – முட்கம்பி வேலிக்கு முன்பாக கற்பூரம் கொளுத்தி வழிப்பட்ட மக்கள்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.…

யாழில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார்  மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்றவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால்…