Tag யாழ்ப்பாணம்

செம்மணியில் 34 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமையும் சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின்…

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ் வந்த பெண் வீதி விபத்தில் உயிரிழப்பு

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.  குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி…

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை

தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.  அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.  இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்  சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.  புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியின் குறுக்கே கடந்து சென்ற மாட்டை விலத்தி செல்ல முற்பட்ட…

அருச்சுனாவிற்கு ஆபத்தில்லையாம்?

யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியிருந்தது.  எனினும், நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும்…

இன்றும் புதிதாக நான்கு!

செம்மணி மனிதப்புதைகுழியில் இன்றைய தினமான புதன்கிழமையும் தொடர்ந்த அகழ்வில் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படுள்ளது . செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் ஏழாம் நாள் அகழ்வு இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜாவின்  மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு…

செம்மணி புதைகுழியில் இருந்து 30 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, 4 எலும்பு…

டிஜிட்டல் யுகத்தில் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்/  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம்…

யாழில் இருந்து காரில் வவுனியா சென்று இளைஞனை கடத்தி கொள்ளையடித்த மூவர் கைது

யாழில் இருந்து வவுனியா சென்று இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு சென்று, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞனை தமது…

செம்மணி வழக்குகளை இணைப்பதற்கு நடவடிக்கை ?

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும்,  முறையான நீதிமன்ற அனுமதியுடன் இரு வழக்குகளையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தாம் ஆலோசனை செய்து வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான…