Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி தான் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.. தொழிலாளர்களிற்காக…
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் , வைத்தியசாலையின் நிர்வாக சீர்குழைவுகளை கண்டித்தும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 08 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 08 மணி வரையிலான 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். …
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான கால நிலையால் , நேற்றைய தினம் புதன்கிழமை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். மதிய நேரம் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில்…
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும் , தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் , அந்நிறுவனம் எம்மை…
ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத்…
சுமாவின் சுயபுராண முகநூல் பிரச்சாரம்! தேசிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தன்னுடைய சுய பாதுகாப்பு முன்னதாக நீக்கப்பட்டமை தொடர்பில் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக தானே தன்னை பற்றியும் தனது பணிகள் பற்றியும் சுயபுராண முகநூல் பிரச்சாரத்திலேயே தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை பற்றி தெரிவிக்கையில் பொத்துவில் முதல் பொலிகண்டி நடைபயணத்தை முன்னெடுத்தமையாலேயே நீக்கப்பட்டதாகவும்…
இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வடகிழக்கில் மயானங்களில் இராணுவத்தால் புதைக்கப்பட்டதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட நீதிமன்ற நீதிபதி…
இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸினை தொடர்ந்து இராமலிங்கம் சந்திரசேகரனும் கால அவகாசம் கோர தொடங்கியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.” என தற்போதைய கடற்றொழில், அமைச்சர்; சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். நெடுந்தீவு பகுதியில் முன்னாள்…
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…