Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை சேகரித்து…
செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார். …
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து…
செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை செம்மணியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேலும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள்…
ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமே செம்மணிப் புதை குழி .அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது மனித உரிமை மீறலாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இராணுவம், அரச பயங்கரவாதம், பேரினவாத அடக்கு…
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. அதன் போது, புதைகுழிக்கு…
யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள்…
செம்மணியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.…
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையில் அரச செலவினங்களை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது முறையற்ற வகையில்…
செம்மணியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும்…