Tag முதன்மைச் செய்திகள்

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு தொடங்குகிறது!

போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு புதன்கிழமை தொடங்குகிறது. கார்டினல்கள் ரோமில் கூடிவிட்டனர், விரைவில் சிஸ்டைன் சேப்பலில் அடைத்து வைக்கப்படுவார்கள், கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த தலைவர் யார் என்று அவர்கள் விவாதிக்கும்போது வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்படுவார்கள். இந்த நிகழ்வின் சடங்குகள் விரிவானவை மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. எனவே இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது? தற்போதைய…

யேர்மனியின் நாடாளுமன்றில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில்  பிரீட்ரிக் மெர்ஸ் புதிய சான்ஸ்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்குப் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அவர் பெரும்பாண்மையை நிறுவியதால் அவர் யேர்மனியின் சான்ஸ்சிலராப் பதவியேற்றார். பிரீட்ரிக் மெர்ஸ் தனது பதவிக் காலத்தை அண்டை நாடுகளுக்குச் சென்று தனது பிரெஞ்சு மற்றும் போலந்து சகாக்களைச்…

பாகிஸ்தானின்நிர்வாக காஷ்மீர் பகுதியில் தாக்குதல்களைத் தொடங்கியது இந்தியா!

பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தியது என இந்தியா அறிவித்தது. இதேநேரம் இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அவை பயங்கரவாத முகாங்கள் என்றும் தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும்  இந்தியா தெரிவித்தது.…

வவுனியா மாநகரசபை தவிர அனைத்தும் தமிழர் வசம்!

வடக்கில் வவுனியா நகரசபை தவிர்ந்த அனைத்து சபைகளும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் வசமே வீழ்ந்துள்ளது. இந்நிலையில் வல்வெட்டித்துறை முற்றாக பேரினவாத கட்சிகளை புறந்தள்ளி நகரசபையின் புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளார்.  வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களிடையே தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளே வாக்குகள் எண்ணப்படும் நிலையில் போட்டியிட்டுவருகின்றன.  இலங்கை தமிழரசுக்கட்சி,…

நடைபெற்று முடிந்த தேர்தல்: மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களில் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (மே 06) மாலை 4.00 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:  நுவரெலியா – 60% முல்லைத்தீவு – 60% மன்னார்…

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கைக்கான விசாக்களைக் கடுமையாக்கும் பிரித்தானியா

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம்என்று உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். வேலை அல்லது படிப்பு விசாக்களில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக அமைச்சர்கள் நம்புகின்றனர். இந்த வகை விசா…

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்: சுமார் 50% வாக்களிப்புடன் நிறைவடைந்தது!

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இற்று செவ்வாய்க்கிழமை (மே 06) அதிகாரப்பூர்வமாக நடைபெற்று நிறைவடைந்தது.  இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி…

அதிர்ச்சியல் ஃபிரெட்ரிக் மெர்ஸ்: வாக்கெடுப்பில் பெரும்பாண்மை கிடைக்கவில்லை!

யேர்மனியில் அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை யேர்மனியின் பாராளுமன்றில் சான்ஸ்சிலரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தமாக உள்ள 630 இடங்களில் இன்றைய வாக்கெடுப்பில்  ஃபிரெட்ரிக் மெர்ஸுக்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால் அவருக்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது யேர்மனியின் கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று…

உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறித் டிரோன் தாக்குதல்கள்!

உக்ரைன் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் மொஸ்கோ மீது இரவு நேர ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது. வான் பாதுகாப்பு பிரிவுகள் 105 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு தாக்குதல்களுக்குப் பின்னர் மொஸ்கோவின் நான்கு விமான நிலையங்களும் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.…

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: மதியம் வரை 30% தாண்டியது!

மதுரி Tuesday, May 06, 2025 இலங்கை, முதன்மைச் செய்திகள் இலங்கையில் நடைபெறும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (மே 06) நண்பகல் 12 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:  கொழும்பு – 28%…