Tag யாழ்ப்பாணம்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிட்டுப்பூங்காவில் போராட்டம்

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும்…

நைஜீரியாவில் இருந்து யாழ் வந்த இளைஞனுக்கு மலேரியா

நைஜீரியாவில் இருந்து யாழ் வந்த இளைஞனுக்கு மலேரியா யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது.  தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த…

யாழில் காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழப்பு

யாழில் காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.  அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தாயார் பனடோல் சிறப் கொடுத்துள்ளார். அந்நிலையில் குழந்தை மயக்கமடைந்துள்ளது. அதனை அடுத்து குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை…

செம்மணியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாநு – மணிவண்ணன் வலியுறுத்தல்

செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும்…

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஒன்பதாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும்…

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்டு

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்டு யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில்…

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு  காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  காரைநகர் – களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டரும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில்…

நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் உயிரிழப்பு

சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை…

யாழில் 5 பிரதேச செயலக பிரிவில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் நிகழ்த்தினார்.  அதனைத்தொடர்ந்து அறிக்கை தொடர்பான அறிமுகவுரையை குறித்த நிறுவனத்தின் வடக்கு…