Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியும், சில சபைகளை…
உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் திருமணமான தம்பதியினர் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விருந்துக்கு சென்றுள்ளனர். விருந்தில் உணவருந்திய பின்னர் , வீடு திரும்பிய…
அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம் ஆதீரா Sunday, May 11, 2025 யாழ்ப்பாணம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் விசேட வைத்திய நிபுணர்களை சந்தித்து,…
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமான நிலையில் , முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை…
அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டு…
யாழ்ப்பாணம் , அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பொதுமகன் ஒருவர் ஆக கூடியது 3 உப்பு பைக்கெட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் , அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. அந்நிலையில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு…
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரவித்தார். மேலும் தெரிவிக்கையில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய…
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக…
அச்சுவேலியில் கடை உரிமையாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (வயது 54)என்பவரே காயமடைந்துள்ளார். அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சென்ற வேளை…