Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எழுவைதீவு கடலில் மிதந்து வந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியொன்றினை மீட்டு, சோதனையிட்ட போது அதனுள் இருந்து…
இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார். யாழ் அரியாலை செம்மணி சித்துபார்த்தி மயானத்தில் சிறுவர்களின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா பயணிகளும் , படகின் பணியாளர்கள் இருவருமாக 14 பேர் குறிகாட்டுவான் நோக்கி…
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்துக் காவல்துறையினரின் வெறியாட்டத்தில் உந்துருளியில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு உந்துருளியில் காவல்துறையினர்…
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை மந்திகை சந்திக்கு அருகில் கடமையில் இருந்து பொலிஸார் வழிமறித்த போது, டிப்பர் சாரதி வாகனத்தினை நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளார். …
செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அப்பகுதியில் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது .எனவே செம்மணி மனிதப் புதை குழியை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செம்மணி புதைகுழியின் பின்னணியிலிருந்ததான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மனிதப் புதைகுழி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுப்பியுள்ளார். கடந்தகால உள்நாட்டு யுத்தம் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளில் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் பற்றிய விடயம், இன்னமும் எமது மக்கள் மத்தியில் பல்வேறு…
தமிழ்மக்கள் கூட்டணிக் கட்சிக்குள் விரைவில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியின்தலைவராக நான் பொறுப்பேற்று முக்கியமான நடைமுறை அதிகாரங்களைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ளேன் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் கூட்டணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு…