Category யாழ்ப்பாணம்

யாழில். சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.  யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டார் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு…

ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ் வந்தவர் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன்…

வடக்கு ஆளுநருடன் பேச்சு?

 உள்ளுராட்சி சபைகளது தேர்தல்கள் முடிந்து சபைகள் பதவியேற்ற பின்னர் தமது பிரதான கடமையாக வடக்கு ஆளுநரை சந்தித்து புகைப்படம் எடுப்பதனை கைக்கொண்டுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.சிறீபிரகாஸ் இன்றைய தினம் சந்தித்துள்ளார். இதன் போது சாவகச்சேரி நகரசபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரோடு விரிவாக…

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 37 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இன்றைய தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்தார்.  இந்த துப்பாக்கிச் சூட்டு…

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.  வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழில். வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த இரு வார செயற்திட்டம்

‘இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025’ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின்…

நெடுந்தீவில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்தொழிலார்களை…

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான கார்பன் பரிசோதனையை நீதிமன்றமே தீர்மானிக்கும்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமென காணாமல்போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே. தற்பரன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ள நிலையிலேயே ஜே. தற்பரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர்…

வடமாகாணத்தில் 33 வைத்தியசாலைகள் தாதியர்கள் இன்றி இயங்குகின்றன.

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமித்து இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படுமெனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.  நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இப்புதிய…

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு…