Category யாழ்ப்பாணம்

செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக…

புதிய பங்காளிகளுடன் முன்னணி ஆர்ப்பாட்டம்!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

செம்மணி அகழ்வு மீண்டும் 21ம் திகதி!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 65ஆக உயர்வடைந்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன், தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும்…

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு – இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.  அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள…

நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு

நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை…

'பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்' – யாழில் விபத்துக்களை தணிப்பதற்கு திட்டம்

‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்’ (Safe Road, Safe health)  என்ற தொனிப்பொருளில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் யோசனையை முன் வைத்துள்ளார்.  விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய…

இன்றும் 7!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தமாக 63 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மட்டும் 7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதினான்காம்; நாளாக இன்றைய தினமான புதன்கிழமை அகழ்வுகள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அதேவேளை…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995…

செம்மணி – நாளை மதியத்துடன் அகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 14ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. அதன் போது…

யாழில். ஆலய கும்பாபிஷேகத்தில் நகைகளை திருடிய குற்றத்தில் வெளிமாகாண பெண்கள் கைது

ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பெண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வேளை தாலிக்கொடி ஒன்று உள்ளிட்ட  ஐவரின் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளது. …