Category இந்தியா

இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் , சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி இறுதி கிரியைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் செய்துள்ளனர்.  இந்திய அமைதி படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987ஆம் ஆண்டு கால பகுதியில் பெண்ணொருவரையும் அவரது மகனையும் இந்திய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்தனர்  அக்கால பகுதியில்…

விற்பனைக்கு சம்பூர்?

வெளிநாடுகளிற்கு இலங்கை மண்ணை விற்க அனுமதியோம் என களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி திருகோணமலையில் சூரிய மின்படலம் மூலமான மின் உற்பத்தி முதலீட்டிற்கு மோடிக்கு செங்கம்பள வரவேற்பினை வழங்குகின்றது. அதற்கேதுவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது வருகையின் போது சம்பூர் மின் உற்பத்தி…

இந்தியாவில் விவசாயிகள் கைது: அவர்களின் கூடாரங்களும் தரைமட்டமானது!

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் , பயிர்களுக்கு சிறந்த விலை கோரி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதிகாரிகள் அவர்களின் தற்காலிக முகாம்களை அகற்ற புல்டோசர்களையும் பயன்படுத்தினர். இன்று வியாழக்கிழமை அதிகாலையில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் போராட்டத் தலைவர்களான சர்வான் சிங் பாந்தர் மற்றும்…

சான்று கையளிப்பு:அத்துமீறல்கள் தொடர்பில்…

இலங்கை கடற்பரப்பினுள் தமது அத்துமீறல்களை தமிழக அரசு தொடர்ந்தும் மறுதலித்தே வருகின்றது. இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று(17) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள்…

13: இந்தியா மனதில் மாற்றமில்லை!

“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான…

மோடி வரார்:அதானி வரார் முன்னாலே!

மோடி வரார்:அதானி வரார் முன்னாலே! உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில்  இன்று (15) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல…

அதானியுடன் முரண்பட மறுக்கும் அனுர?

இந்திய முதலீட்டாளர் அதானியுடன் முரண்பட அனுர அரசு தொடர்ந்தும் பின்னடித்தே வருகின்றது.அதானியுடனான ஒப்பந்தம் இதுவரை இரத்து செய்யப்படவில்லையென அனுர அரசு அறிவித்துள்ள நிலையில் திட்டத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியின்படி செயல்பட அரசாங்கம் தயாராக இருந்தால், 484 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தமது நிறுவனம் மீண்டும் தொடங்கலாம் என்று அதானி கிரீன் எனர்ஜி இலங்கை எரிசக்தி…

தேர்தலிற்கு முன் மோடி வருகிறார்?

அதானி முதலீட்டு வெளியேற்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அஇந்திய பிரதமரின் விஜயம் உறுதியான போதும் திகதி முடிவாகவில்லை எனினும்  ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் அவரது பயணம் நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவின் குப்பை மலையைத் தரைமட்டமாக்க டெல்லியின் உறுதிமொழி

இந்தியாவின் தலைநகரை சுத்தம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்த புதிய அரசாங்கம் புது டெல்லி உள்ளூர் அரசாங்கம், மார்ச் 2026 க்குள் அதன் மிகப்பெரிய குப்பைக் குவியல்களில் ஒன்றை சுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளது. நகரின் வடக்கு புறநகரில் உள்ள பால்ஸ்வா குப்பைக் கிடங்கு ஒரு அசிங்கமான குப்பை மலையாகும். டெல்லியின் வான் உயரத் தெரியும் பல…

இந்தியா மணிப்பூரில் அடுத்தடுத் நிலநடுக்கம்

இந்தியா மணிப்பூர் மாநிலத்தில் இன்று புதன்கிழமை 5.7 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மேலும் அதன் அதிர்வுகள் வடகிழக்கு முழுவதும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிலத்தைத் தாக்கியது. இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து 44 கி.மீ கிழக்கேயும், 110…