இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள மகிழுந்து விற்பனையாளரின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இத்த தீ விபத்தில் 17 மின்சார மகிழுந்துகள் எரிந்து நாசமாகின.
அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. தீ பகலில் அணைக்கப்பட்டது.
சில டெஸ்லாக்கள் மகிழுந்துகள் நிறுத்தப்பட்டிருந்த காட்சியறையும் கட்டிடமும் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தீயணைப்புத் துறை தெரிவித்தது.
அண்மைக்காலமாக டெஸ்லா நிறுவனத்தின் மகிழுந்துகள் அமெரிக்காவில் பல்வேறு இடங்களிலும் தீக்கிரையாக்குவதும் தேசப்படுத்துவம் நடந்துவருகிறது.
யேர்மனி பேர்லினிலும் ஒரு வாரத்திற்கு முன்னர் 4 டெஸ்லா மகிழுந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் டெஸ்லா மகிழுந்துகளுக்கு மின்சாரத்தை ஏற்றும் மின்னேற்றிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.