மியான்மரில் உள்ள சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT/UTC) நிலநடுக்கம் ஏற்பட்டது என USGS தெரிவித்துள்ளது.
இங்கே நடந்த நிலநடுக்கத்தில் சாலைகளில் வெடிப்புகள் மற்றும் வளைவுகள் ஏற்பட்டன. அத்துடன் வீடுகளின் கூரைகளும் துண்டு துண்டாக உடைந்து விடுந்தன. ஐந்து மாடிக் கட்டிடம் இந்து விழுந்தது. மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடிவந்தனர்.
மியான்மரில் ஒரு மசூதி பகுதியளவு இடிந்து விழுந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது இருப்பினும் தெளிவான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.
மியான்மரில் உள்ள அவா பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
தாய்லாந்தைத் தவிர, சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பெய்ஜிங்கின் நிலநடுக்க நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை 7.9 ரிக்டர் அளவில் அளவிட்டது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமும், அதன் புத்த மத மையப்பகுதியின் மையத்தில் உள்ள பண்டைய அரச தலைநகருமான மண்டலேயிலும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
A powerful 7.7-magnitude earthquake struck Myanmar, with the epicenter located just 6 km from Mandalay. The quake caused destruction, including damage to multi-story buildings. Reports indicate that numerous buildings have collapsed. pic.twitter.com/T7J9xlOJ1b
— AZCoin News (@azcoinnews) March 28, 2025 — Hamdan News (@HamdanWahe57839) March 28, 2025