தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு பெரிய நிலநடுக்கத்தை குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர். கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து குறைந்தது 43 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இரண்டு உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி அண்டை நாடான மியான்மரில் இருந்ததாக முதற்கட்ட அறிக்கைகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவில் பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் மியான்மர் இரண்டிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் துல்லியமான எண்ணிக்கை தெளிவாக இல்லை.
தாய்லாந்து பிரதமர் பாங்காக்கில் அவசரகால நிலையை அறிவித்ததாகவும், மியான்மர் தலைநகர் மற்றும் அதன் இரண்டாவது பெரிய நகரத்தில் அவசரநிலையை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
டுக்கத்தின் விளைவாக சில மெட்ரோ மற்றும் இலகு ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்திற்குப் பிறகு தாய்லாந்தின் பங்குச் சந்தை முழுமையாக ஸ்தம்பித்ததாக அறிவித்தது.
🇹🇭 EARTHQUAKE IN THAILAND:
The earthquake originated on the Thai-Myanmar border was felt as far as Bangkok.
Much damage and building collapses!
1/ pic.twitter.com/Xg1tJxXQHp
— Lord Bebo (@MyLordBebo) March 28, 2025