வடகிழக்கினை மையப்படுத்திய கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் ‘சோலார்’ தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
500 கிலோவோட்டில் இருந்து 1 மெஹாவோட் வரை, நிறுவனங்களுக்கு, ஒரு அலகுக்கு வழங்கப்படும் கட்டணத்தை, நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைத்துள்ள அரசாங்கம், நுகர்வோருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை, நூற்றுக்கு 15 மேலான சதவீதத்தில் குறைத்துள்ளது. இதனால், ஒரு அலகுக்கான கட்டணம் 19 ரூபாவினால் குறைந்துள்ளது .
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக, கடந்த அரசாங்கம், கூரைக்கு மேலான ‘சோலார்’ தொகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு மின் அலகுக்கு 27 ரூபாயை கட்டணமாக செலுத்தியது. இதனால், கூரைக்கு மேலான ‘சோலா’ தொகுதியை நிர்மாணிப்பதில் மக்கள் ஆர்வம் காண்பித்தனர் என்றார்.
சிறிய கூரை சூரிய மின் உற்பத்தி தொகுதிகளை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி அல்லது டொலர்களை மிச்சப்படுத்த முந்தைய அரசாங்கம் நம்பியதாகவும், மின்சக்தி அமைச்சராக காஞ்சனா விஜேசேகர 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தி நாற்பத்தைந்து மெகாவோட்டாக அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது.