யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரிமற்ற வகையில் தர்க்கம் புரிந்தமையால், அதனை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் வெளிநடப்பு செய்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து கடும் சர்ச்சையான வாதப் பிரதிவாங்கள் தொடர்சியாக இடம்பெற்றன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதனுக்கும் க.இளங்குமரனுக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து அர்ச்சுனா இராமாநாதன் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் மற்றும் அமைச்சர் சந்திரசேகருடனும் முரண்பட்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரச ஊழியர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
அவரை அமைதிகாக்கும் படி அமைச்சர் சந்திரசேகர் கூறிய போதும் அவர் தொடர்சியாக விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும், இயல்பு நிலையில் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் .