19
தெற்கு காசாவில் உள்ள ஹமாஸின் இராணுவ புலனாய்வுத் தலைவர் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர் ஒசாமா தபாஷ் குழுவின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராகவும் இருந்ததாகக் கூறியது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் எக்ஸ் தளத்தில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளனர்.
அக்டோபர் 2023 பயங்கரவாதத் தாக்குதலின் போது இலக்குகள் மற்றும் ஊடுருவல் நோக்கங்களைத் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்கு அவர் பொறுப்பு என்றும், தரையில் போர் உத்திகளுக்குப் அவர் பொறுப்பேற்றதாகவும் இஸ்ரேல் கூறியது.
அவர் எப்போது அல்லது எங்கு கொல்லப்பட்டார் என்பது குறித்து இஸ்ரேல் கூறவில்லை. மேலும் ஹமாஸ் இந்தக் கூற்று குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.