by ilankai

மதுபோத்தல்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்துக்குள்ளாது: மதுப்பிரியர்கள் போத்தல்களை எடுத்துச் சென்றனர்

மதுரி Wednesday, March 19, 2025 இலங்கை

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் எஹலியகொட பிரதேசத்தில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் வீதியில் சிதறியுள்ளன.

இவ்வாறு வீதியில் சிதறிய மதுபான போத்தல்களை மதுப்பிரியர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்களில் வெளியாகியுள்ளன.

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles