Home யாழ்ப்பாணம் யாழில் 500 கிராம் மாவாவுடன் மூவர் கைது

யாழில் 500 கிராம் மாவாவுடன் மூவர் கைது

by ilankai

ஆதீரா Sunday, March 16, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

உடுவில், பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இருவர் தலா 200 கிராமுடனும், மற்றையவர் 100 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடனும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles