முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இனந்தெரியாத நபர்கள் சிலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் சிறை அதிகாரி சம்பவ இடத்திலேயே காயமடைந்து உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 61 வயதுடைய சிறிதத் தம்மிக்க பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரியே என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலாளி துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுவரை, கொலையாளி யார் அல்லது கொலைக்கான நோக்கம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலை கண்காணிப்பாளர், பூசா சிறைச்சாலையில் பணியாற்றி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.