இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிப்பதை விட, உக்ரைனைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவை விட உக்ரைனை கையாள்வது தனக்கு மிகவும் கடினமான பணி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைதியைப் பேண முயற்சிக்கும் தரகராகச் செயல்படுவது மிகவும் கடினமான பணி என்று கூறினார்.
உக்ரைனுடனான போர்நிறுத்தம் எட்டப்படும் வரை ரஷ்யா மீது பெரிய அளவிலான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாகடிரம்ப் கூறியிருந்தார்.
ரஷ்யாவை சமாளிப்பது தனக்கு எளிதாக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.