Home உலகம் காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதல்: சூத்திரதாரி அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டார் – டிரம

காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதல்: சூத்திரதாரி அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டார் – டிரம

by ilankai

180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட காபூல் அபே கேட் தற்கொலை குண்டுவெடிப்பைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதி (முகமது ஷரிபுல்லா) கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக ஓவல் அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காங்கிரசில் தனது முதல் உரையின் போது டிரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

கைது அல்லது கைதுக்கு வழிவகுத்த நடவடிக்கை குறித்து அவர் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்தக் கொடூரத்திற்குப் பொறுப்பான உயர்மட்ட பயங்கரவாதியை (முகமது ஷரிபுல்லா) பிடிக்க உதவியதற்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைநகரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பின்னர் , மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயன்றபோது, ​​ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் அபே கேட்டிற்கு வெளியே நிரம்பியிருந்த கூட்டத்தினரிடையே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, குண்டுவெடிப்பில் 183 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில்  எல்லையை பாதுகாத்த படையினரில் 13 அமெரிக்கப்படையில் கொல்லப்பட்டனர்.

அவர் இப்போது அமெரிக்க நீதியை வேகமான எதிர்கொள்ள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று டிரம்ப் கூறினார். அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆப்கானிஸ்தானில் இருந்து பேரழிவு தரும் மற்றும் திறமையற்ற பின்வாங்கலை சாடினார். 

பயங்கரவாதியின் பெயரை டிரம்ப் குறிப்பிடாவிட்டாலும் அந்த நபர் முகமது ஷரிபுல்லா என்று வெள்ளை மாளிகை பணியாற்றும் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளர். அவர் அபே கேட் தாக்குதலை திட்டமிட்டார் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஷரிபுல்லா கடந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

வார இறுதியில் அமெரிக்க முகவர்கள் அந்த நபரை விசாரித்ததாகவும், அவர் தாக்குதலில் தனது பங்கை ஒப்புக்கொண்டதாகவும், மார்ச் 2024 இல் மாஸ்கோவில் நடந்த தாக்குதல் மற்றும் ஈரானில் நடந்த பல தாக்குதல்களிலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷரிபுல்லா எந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதியை ஒரு படி நெருக்கமாக” கொண்டு வரும் என்று FBI இயக்குனர் காஷ் படேல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை.  

2023 ஆம் ஆண்டில், காபூல் விமான நிலைய தற்கொலை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக  அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.

Related Articles