வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார்.
”மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தனிநபர் பிரேரணை கூட கொண்டுவரப்பட்டிருந்தது.
ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.கூட்டமைப்பும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போட்டியிடுமிடத்து ஏற்படும் வெற்றிடத்துக்கு தான் நாடாளுமன்றம் செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.