கூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
தமது கூட்டணியில் தமிழரசு கட்சி சேரலாம் என சொன்னார்கள். நாங்கள் ஒற்றுமை கருதி பேசாது இருந்தோம். அதற்காக தமிழரசு கட்சியை மலினப்படுத்தி கீழ்நிலை படுத்த எவராலும் முடியாது
கூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை. நாம் கூட்டமைப்பாக செயற்படவே விரும்பினோம் அதற்காக நாம் ரெலோ , ஈபி ஆர் எல் எப் தலைவர்களுடன் பேசி இருக்கிறோம்
அதேபோன்று, புளொட் அமைப்பில் இருந்தாலும் சித்தார்த்தன் தமிழரசு கட்சிக்காரன். அவரின் பூர்வீகம் தமிழரசு கட்சியே , அவரிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். நீங்கள் கட்சியின் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும் என
கூட்டமைப்பாக செயற்பட நாம் தயார். ஆனால் கட்சிகளின் கூட்டணிகளுக்குள் நாம் செல்ல தயார் இல்லை என தெரிவித்தார்.