18
கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு , ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது , குறித்த பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 23) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞனை மீட்டு, ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.