22
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியுள்ளார்.
இது தொடர்பான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நிறுவுவதன் மூலம் தகவல்தொடர்புகளை நெறிப்படுத்துதல், தேசிய விழுமியங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒன்றுபட்ட மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தற்போது ஆங்கி லத்தை தங்கள் அதிகாரப்பூர்வ மொழியாக நியமித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் அமெரிக்காவில் 350 மொழிகள் வரையில் அங்குள்ள மக்கள் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.