அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலேன்ஸ்கி அங்கு டிரம்புடன் ஏற்பட்ட வாக்குவாத சந்திப்பைத் தொடருந்து அங்கிருந்து பிரித்தானியாவுக்கு நேற்று சனிக்கிழமை வந்து தரையிறங்கினார்.
தரையிறங்கிய ஜெலென்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க டவுனிங் தெருவுக்கு வந்தார்.
பின்னர் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்தையை நடத்தினர்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இங்கே வரவேற்கப்படுகிறார். சந்திப்புக்குப் பின்னர் நாங்கள் உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் உக்ரைனுடன் நிற்கிறோம் எனப் பிரித்தானியப் பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
தனது நாட்டின் ஆதரவிற்கு ஸ்டார்மருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னர் சார்லஸை சந்திக்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை அவரது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் மன்னர் சார்லஸ் வரவேற்பார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்டார்மரை சந்திப்பதற்கு முன்பு, உக்ரைன் தலைவர் வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் கியேவின் அரிய கனிமங்கள் குறித்த எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், உக்ரைன்-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்க அமெரிக்கா சென்றார்.
வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் ஊடகங்கள் முன்னால் நடந்த சந்திப்பில் ஜெலென்ஸ்கி, டிரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோர் இடையே நடந்த கடும் வாக்குவாதத்தை அடுத்து ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.