Home யாழ்ப்பாணம் உள்ளூராட்சி தேர்தல் கூட்டு

உள்ளூராட்சி தேர்தல் கூட்டு

by ilankai

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

 யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

 குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 அதேவேளை இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.

 குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

Related Articles