Home இலங்கை முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு

by ilankai

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார். 

பெரும்பாலான குற்றங்களுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பாதுகாப்பு அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles