Home இலங்கை காரின் மீது துப்பாக்கி சூடு – கஞ்சாவுடன் தம்பதி கைது

காரின் மீது துப்பாக்கி சூடு – கஞ்சாவுடன் தம்பதி கைது

by ilankai

மாலபே பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, காரில் பயணித்த தம்பதியினரை சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர். 

மாலபே பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​ கார் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். 

இதன்போது குறித்த கார், திடீரென பின்னோக்கி பயணித்துள்ள நிலையில், பொலிஸ் அதிகாரி அதன் சக்கரங்களில் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதனால் கார் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி நின்றுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, ​​சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.800 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர், போதைப்பொருட்களை கொண்டு சென்ற 30 வயது சந்தேகநபரும், 33 வயதான பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் தெல்கொட பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி என தெரியவந்துள்ளது.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles