யேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் அருகே நடந்த கத்தி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணிக்கு நடந்ததாக காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தனர். மேலும் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன காவல்துறையினர் தெரிவித்தனர்.
நினைவுச்சின்னத்தின் ஒரு பக்கத்தில் அவசரகால வாகனங்களும் ஆயுதமேந்திய காவல்துறையினரும் வரிசையாக நிற்பதை படங்கள் காட்டுகின்றன. அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி வளைத்து, அந்தப் பகுதியைத் தேடிக்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட 30 வயது ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணி, உயிருக்கு ஆபத்தில்லா காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் ஒரு ஆண் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்டவருக்குத் தெரியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த ஆயுதம் என்னவென்று தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பல அதிகாரிகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நினைவுச்சின்னத்தின் வடக்குப் பகுதியில் நடந்ததாகத் தெரிகிறது. அதற்கு எதிரே அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது.
19,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் கொலை செய்யப்பட்ட யூதர்களுக்கான நினைவுச்சின்னம், யெர்மனியின் மைய ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் என்று விவரிக்கப்படுகிறது.
யேர்மன் தலைநகரில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே வன்முறைக் குற்றத்தைச் செய்யத் தயாரானதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைக் கைது செய்ததாக சுவீடன் கால்துறையினர் தெரிவித்தனர்
சாத்தியமான நோக்கம் குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியவில்லை என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுசன்னா ரினால்டோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பேர்லினில் நடந்த தாக்குதலுக்கும் ஸ்டாக்ஹோமில் நடந்த கைதுகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தக் கருத்தும் இல்லை.