Home சுவிற்சர்லாந்து சுவிசில் காண்டாமிருகத்தைத் தாக்க முற்பட்ட நபர்

சுவிசில் காண்டாமிருகத்தைத் தாக்க முற்பட்ட நபர்

by ilankai

சுவிற்சர்லாந்து பாசல் நகரில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த காண்டாமிருகத்தைத் தாக்க முயற்றாார்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடத்தது என்றும் தாக்குதலை நடத்த முற்பட்ட நபருக்கு மன உளைச்சல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காண்டாமிருகத்திற்கோ அல்லது அந்த நபருக்கோ எதுவித காயங்களும் ஏற்படவில்லை என விலங்குகள் சரணாலயச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

தனியுரிமைக் காரணங்களுக்காக தாக்குதல் நடத்த வந்த நபரின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. தாக்குதல் நடத்த வந்தவரின் நோக்கத்தை வனவிலங்குகள் சரணாலய நிர்வாத்தினரோ அல்லது காவல்துறையினரோ வெளியிடவில்லை.

சம்பவத்தை பாசல் நகரின் காவல்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினர்.

இச்செய்தியை யேர்மன் நாளேடான ”டை ஓபர்பாடிஷே” செய்தி வெளியிட்டது.

இதே சரணாலயத்தில் 1990 ஆம் ஆண்டு சுற்றுலாச் சென்ற ஒருவர் காண்டா மிருகத்தின் கூண்டுக்குள் நுழைந்ததால் அங்கு மரணம் ஏற்பட்டது. 20 வயதுடைய பெண் ஒருவர் காண்டா மிருகக் குட்டியை தாக்கிய பொழுது தாய்க் காண்டாமிருகம் குறித்த பெண் தாக்கியது.

Related Articles