36
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ க்கு இந்திய வம்சாவழியான நபரான காஷ் படேல் நிமயனம் பெற்றுள்ளார்.
இவரது பதவி செனட் வாக்கெடுப்பினால் உறுதி செய்யப்பட்டது. ஆதவாக 51 – 49 என்ற வாக்குகள் அடிப்படையில் இவரது இயக்குநர் பதவியை செனட் அங்கீகரித்தது.
இந்தப் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
முன்னதாக அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினார். இவர், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.