அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக அனுர அரசு உண்மையினை வெளியிட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் அதானி நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியுள்ளது.
“உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ மக்கள் நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் மன்னார் பூநகரி மின் உற்பத்தி திட்டத்தை இந்திய அரசு தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி வருவது தெரிந்ததே.