Home யாழ்ப்பாணம் அருச்சுனா கராட்டிக்காரன்:அச்சத்தில் சந்திரசேகரன்!

அருச்சுனா கராட்டிக்காரன்:அச்சத்தில் சந்திரசேகரன்!

by ilankai

தையிட்டி போராட்ட களத்தை திசை திருப்ப அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதான குற்றச்சாட்டின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையே முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அல்ல என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாண நட்சத்திர விடுதி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உட்பட மூவருக்கு இடையில் கைகலப்பு ஒன்று ஏற்பட்ட நிலையில், அதன்போது நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்படாதமை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக ஊடகவியாளார் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அர்ச்சுனா நல்லதொரு கராட்சி வீரனென தெரிவதாக கருத்து வெளியிட்ட இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடகவியலாளர்களை கவனமாக அவரிடம் கேள்வி எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.

Related Articles