அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல் விடயங்களை சிக்கலாக்குகிறது என்று ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சமி அபு ஜுஹ்ரி கூறுகிறார்.
இஸ்ரேல் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரே வழி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை மதிப்பதுதான் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உணர வேண்டும் என்று ஹமாஸின் சமி அபு ஜுஹ்ரி கூறியுள்ளார் .
இரு தரப்பினரும் மதிக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம் உள்ளது என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் கைதிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரே வழி இதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் சமி அபு ஜுஹ்ரி கூறினார்.
அச்சுறுத்தல்களின் மொழிக்கு எந்த மதிப்பும் இல்லை. அது விடயங்களை மேலும் சிக்கலாக்குகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் எல்லா நரகங்களும் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தினார். இதற்குப் பதிலளிக்கும் போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.