இந்தியா எங்களுக்காக ஒத்துழைக்கணும்.. அதைத்தான் நாங்க விரும்புறோம்.. இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பேச்சு! என்ன விஷயம் தெரியுமா ??இந்தியா மற்றும் இலங்கைக்கு மத்தியில் நல்லுணர்வு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புவதாக அந்நாட்டு அதிபர் விக்ரமசிங்கே பேசியிருக்கிறார். Samayam Tamilகடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மேலும், வெளிநாடுகளிடமிருந்து இலங்கை பெற்ற கடன் தொகையும் கடுமையாக உயர்ந்தது. 2019ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88% எட்டியது. கொரோனா பேரிடரால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பினாலும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது.அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோட்டபயா ராஜபக்ஷேமீது மக்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள். அதன்படி 2019 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமை வெற்றிபெற்று இலங்கையில் ஆட்சி மாறியது.
இலங்கைக்கு நல்ல காலம் பிறந்துடிச்சி.. மகிழ்ச்சியில் மக்களும் அரசாங்கமும்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காலப்போக்கில் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மாறியது. இலங்கையின் கடினமான நேரங்களில் இந்தியாவும் எக்கச்சக்கமான உதவிகளை செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, இலங்கையில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்திருந்தது. அந்த வகையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான, ITC அதன் முதல் வெளிநாட்டு கிளையை இலங்கையில் நிறுவியது. இந்த ஹோட்டலின் திறப்புவிழா நேற்று நடந்தது.இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு நாங்கள் அதரவளிக்கிறோம் : களத்தில் இறங்கிய அமெரிக்கா..
அப்போது பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை விரும்புவதாக பேசினார். மேலும், சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா எங்களுக்காக ஒத்துழைக்கணும்.. அதைத்தான் நாங்க விரும்புறோம்.. இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பேச்சு! என்ன விஷயம் தெரியுமா ??
தொடர்ந்து பேசிய அவர்,”இந்த ஐகான் (ITC ரத்னதிபா) இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவிலிருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடியும் நானும் இரு நாடுகளையும் எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என ஆலோசித்து தொலைநோக்கு பார்வையுடன் ஒரு அறிக்கையை உருவாக்கினோம். அதன் ஒரு பகுதியே இந்த ஐடிசி ஹோட்டலாகும்.இலங்கைக்காக மாறிமாறி உதவி செய்யும் உலக நாடுகள்.. சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் என்ன செய்திருக்கு பாருங்க…
பொருளாதாரப் பின்னணியில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு மாறி வருகிறது. ஆகவே, இரு நாடுகளுக்குமான நல்ல உறவை சுற்றுலாத் துறை மேம்படுத்துகிறது. சுற்றுலா மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்துவரும் விஷயங்களிலும் இந்தியா இலங்கை இணைந்து பணியாற்ற வேண்டும்.. இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
பல ஆண்டுகளாக, இலங்கை விடுமுறையை கழிக்க பொருத்தமான இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஹைதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் குதித்து இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும் எனப் பேசினார்.
கேர்ள்ஸ் கேங் ட்ரிப் பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா ?இந்திய பெருங்கடலின் இந்த சிறுதுளிக்கு போய்ட்டுவாங்க.. வேற லெவல் ஸ்பாட்!!
சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான ஐடிசி ஹோட்டலின் முதல் வெளிநாட்டு கிளையை இலங்கையில் நிறுவியது தொடர்பாக பேசுகையில், “உலகில் இருக்கும் பல ஹோட்டல்களை இலங்கையில் முதலீடு செய்ய இது ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” என்றார் ஆசிரியர் பற்றிராதிகா நெடுஞ்செழியன் கன்சல்டன்ட்நான் ராதிகா நெடுஞ்செழியன், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். செய்தியை கொடுப்பவருக்கும் செய்தியை பெறுபவருக்கு இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதன்படி, முதுகலை பட்டம் படிக்கும்போதே மாணவ பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறேன். இப்போது முழு நேர ஊடகவியலாளராக வேலை செய்து வருகிறேன். எனது கெரியரில் முதல் வேலையாக தமிழ் சமயம் தளத்தில் அடியெடுத்தது வைத்திருக்கிறேன். இங்கு சினிமா, தொலைக்காட்சி சார்ந்த செய்திகளை கொடுத்துவருகிறேன். இதுபோக, அரசியல், வாழ்வியல் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் அதிகம்…. மேலும் படிக்க