20
மீண்டும் இலங்கை முழுவதும் மின்வெட்டு!
இலங்கை முழுவதும் இன்று (10) மற்றும் நாளை (11) ஆம் திகதிகளில், ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலைய மூன்று ஜெனரேட்டர்கள் செயலிழந்துள்ளதன் விளைவாக பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்வெட்டு ஏற்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மின்வெட்டு குறித்து தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை அல்லது முன் அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது